உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நேபாளத்திற்கு உதவிய மாணவியர்

நேபாளத்திற்கு உதவிய மாணவியர்

மதுரை: மதுரை செயின்ட் ஜோசப்ஸ் மெட்ரிக் பள்ளியில் 1963ல் பத்தாம் வகுப்பு முடித்த முன்னாள் மாணவியர் 17 பேர் 80 வயதைக் கடந்தும், ஒன்றிணைந்து சமூகநல உதவிகளை செய்து வருகின்றனர். முதியோர் இல்லங்களுக்கு காது கேட்கும் கருவி, மிக்ஸி போன்ற பொருட்களை வழங்கியுள்ளனர். தற்போது நோபாள நாட்டில் வெள்ளப் பெருக்கில் பாதிப்படைந்தோருக்கு நிவாரண நிதி வழங்க முன்வந்தனர். இதற்காக அவர்கள் ரூ.30 ஆயிரம் சேகரித்து சாருமதி, தனலட்சுமி, மனோரமா, பவளமணி ஆகியோர், இந்திய செஞ்சிலுவை சங்க தலைவர் ஜோஸ், செயலாளர் சாய், பொருளாளர் டாக்டர் நரேந்திரன் ஆகியோருடன் சென்று கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை