உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கைதிகளுக்கு அறுவை சிகிச்சை; வாட்ஸ்அப்பில் இனி ஒப்புதல்

கைதிகளுக்கு அறுவை சிகிச்சை; வாட்ஸ்அப்பில் இனி ஒப்புதல்

மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் கைதிகளுக்கு அவசர அறுவை சிகிச்சை செய்ய வாட்ஸ்அப் மூலம் 6 மணி நேரத்திற்குள் ஒப்புதல் பெறும் திட்டம் துவங்கப்பட்டுள்ளதாக நிலைய மருத்துவ அலுவலர் (ஆர்.எம்.ஓ.,) டாக்டர் சரவணன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமெனில் அவர்களது உறவினர்களில் ஒருவர் சம்மத கடிதத்தில் கையெழுத்திட வேண்டும். கைதிகளுக்கு சிறை எஸ்.பி., தான் கடிதம் தர வேண்டும். இதனால் அறுவை சிகிச்சை செய்வதில் தாமதம் நேர்ந்தது. அதை தவிர்க்க எந்த துறை மூலம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமோ அந்த துறை டாக்டரிடம் இருந்து ஆர்.எம்.ஓ., வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும். உடனடியாக அதை சிறை எஸ்.பி.,க்கு அனுப்பினால் அதிகபட்சமாக 2 முதல் 3 மணி நேரத்திற்குள் சிறையில் இருந்து ஒப்புதல் கடிதம் வாட்ஸ்அப் மூலம் பெற முடியும்.கைதிக்கு அவசர சிகிச்சை செய்ய இனி தாமதமின்றி ஒப்புதல் கடிதம் பெற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும். தினமும் ஒன்று அல்லது இரண்டு கைதிகளுக்கு இம்முறையில் வாட்ஸ்அப் கடித பரிமாற்றத்தால் அவசர அறுவை சிகிச்சை எளிதாகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை