மேலும் செய்திகள்
லஞ்சம் வாங்க தனியறை... 'வெளங்குமா' கனிமவளத்துறை!
26-Nov-2024
மதுரை: 'நாத்திகம் வளர ஆத்திக கடவுள்களே தேவைப்படுகிறார்கள்' எனமதுரைக் கம்பன் கழக விழாவில் சின்மயா மிஷன் தலைவர் சுவாமி சிவயோகானந்தா பேசினார்.மதுரைக் கம்பன் கழக அறக்கட்டளையின் ஆண்டு விழா, அவ்வை - பாரதி விழா தலைவர் சங்கர சீத்தாராமன் தலைமையில் நேற்று (டிச. 6) துவங்கியது. இணைச் செயலாளர் ரேவதி சுப்புலட்சுமி வரவேற்றார். செயலாளர் புருஷோத்தமன் ஆண்டறிக்கை வாசித்தார். எஸ்.பி.ஐ., வங்கி மண்டலத் தலைவர் ஹரிணி 'கம்பனைச் சந்திப்போம்' நுாலை வெளியிட 'பபாசி' தலைவர் சேது சொக்கலிங்கம் பெற்றார்.பேச்சு,கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் முதல் 3 இடங்களை வென்றவர்களுக்கு தியாகராஜர் கல்லுாரி செயலாளர் ஹரி தியாகராஜன் பரிசு வழங்கினார்.அவர் பேசுகையில், ''நாராயணா நாமத்தில் 'ரா' வும், நமசிவாய நாமத்தில் 'ம' வும் சேர்ந்து 'ராம' எனும் மந்திரத்தை முன்னோர்கள் வழங்கினர். ராமனைக் காட்டிலும் ராம நாமத்திற்கு மகிமை அதிகம். தமிழின் 'கதி'யாக அமைந்தவர்கள் 'க'ம்பனும் 'தி'ருவள்ளுவரும். தெரியாத ஒன்றை தெரிந்த ஒன்றுடன் ஒப்பிட்டு கற்க வேண்டும். ராமன் சிறந்த வீரன் மட்டுமல்ல, தீரனும் ஆவார் என கம்பன் குறிப்பிடுகிறார். உடல் வலிமை படைத்தவன் வீரன், மன உறுதி படைத்தவன் தீரன். ராமன், கடவுளின் அவதாரமாக இருந்ததால் வீரமும் தீரமும் ஒரே உருவத்தில் பெற்றவர்'' என்றார்.சுவாமி சிவயோகானந்தா பேசியதாவது: ராமாயணமும், மகாபாரதமும் கற்பனை கதைகள் கிடையாது. மகரிஷிகள் அவற்றை நமக்கு வழங்கினர். ராமாயணத்தின் பெருமை பல நாடுகளில் ஊடுருவியுள்ளது. தாய்லாந்தில் ராமாயணத்தை தேசிய நுாலாக போற்றுகின்றனர்.தமிழில் கம்பராமாயணம் இயற்றப்படாமல் இருந்திருந்தால் தமிழர்கள் பலர் நாத்திகர்களாக இருந்திருப்பர். நாத்திகம் வளரவும் ஆத்திக கடவுள்கள் தான் தேவைப்படுகின்றனர் என்றார். இணைச் செயலாளர் ராஜா நன்றி கூறினார்.
26-Nov-2024