மேலும் செய்திகள்
டேக்வாண்டோ போட்டி
13-Feb-2025
மதுரை : மதுரையில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பூம்சே, க்யூரூகி பிரிவுகளில் மதுரை டேக்வாண்டோ அகாடமி மாணவர்கள் 32 தங்கம், 16 வெள்ளி, 10 வெண்கல பதக்கம் வென்று ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றினர். வெற்றி பெற்ற மாணவர்களை அகாடமி தலைமை பயிற்சியாளர் நாராயணன், பயிற்சியாளர்கள் பிரகாஷ்குமார், சஞ்சீவ், விஜய், பிலால், நவீன், புவனேஸ்வரி பாராட்டினர்.
13-Feb-2025