பொறுப்பேற்பு
மதுரை : மதுரை மண்டல தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனராக, திருச்சியில் பணியாற்றிய ஆர்.சித்தார்த்தன் பொறுப்பேற்றார். மதுரை முதல் குமரி வரையான மாவட்டங்கள் இவரது கண்காணிப்பில் இருக்கும்.அவர் கூறுகையில், ''தொழிற்சாலைகளில் விபத்தை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சிவகாசி பட்டாசு ஆலைகளில் விபத்துகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார். விருதுநகர் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குனர் வேல்முருகனும் இதே அலுவலகத்தில் பொறுப்பேற்றுள்ளார்.