| ADDED : நவ 20, 2025 06:05 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டி தாலுகா அலுவலக கட்டடம் பராமரிப்பின்றி ஆங்காங்கே சேதமடைந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. 1986ல் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தில் சமூக பாதுகாப்பு திட்டம், நில அளவை, வருவாய்த்துறை, தேர்தல் பிரிவு, மாடியில் வட்ட வழங்கல், தேர்தல் பிரிவு உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன. நாற்பதாண்டு கட்டடத்தில் ஆங்காங்கு விரிசல், வெடிப்புகள் காணப்படுகின்றன. நுழைவுப் பகுதி போர்டிகோவின் 'சிலாப்' மேற்பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. இந்நிலையில் வருவாய்த்துறை பணிகளுக்காக இங்கு தினமும் பலநுாறு பேர் வருகின்றனர். அவர்கள் அச்சமுடன் வந்து செல்கின்றனர். விவசாயிகள் குறைதீர் கூட்டம், அமைதி பேச்சுவார்த்தை, அதிகாரிகள் ஆய்வு கூட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இத்தகைய முக்கியத்துவம் உள்ள அலுவலகத்தின் பழமையான கட்டடத்தை முறையாக பராமரிப்பது அவசியம். தாலுகா அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.