உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தமிழ்க் கூடல் விழா

 தமிழ்க் கூடல் விழா

மதுரை: மதுரை ரூபி மெட்ரிக் பள்ளியில், இளங்கோ முத்தமிழ் மன்றம் சார்பில் தமிழ்க்கூடல் நடந்தது. பள்ளித் தாளாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மன்றத் தலைவர் சங்கரலிங்கனார் வரவேற்றார். கவிஞர் வாசகன், மன்றச் செயலாளர் சண்முக ஞானசம்பந்தன், துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர். திருச்சி பாரதிதாசன் பல்கலை ஆட்சிப் பேரவை உறுப்பினர் ஞான சரஸ்வதி, சூரியகுமார் பங்கேற்று 'உள்ளம் அள்ளும் வள்ளுவம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர். பள்ளி முதல்வர் சங்கீதா நன்றி கூறினார். உடற்கல்வி இயக்குநர் காட்வின் வேதநாயகம், கும்பகோணம் பயிற்சி ஆசிரியர் மாருதிமாலன், வள்ளுவர் வழி மன்றப் பொறுப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ