தமிழ்க்கூடல் நிகழ்வு
மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்வு நடந்தது. ஆய்வுவள மையர் ஜான்சிராணி வரவேற்றார். சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமை வகித்தார். சேர்மத்தாய் வாசன் கல்லுாரி முதல்வர் கவிதா முன்னிலை வகித்தார். எழுத்தாளர் ஆர்னிகா நாசர் பேசினார். ஆய்வறிஞர் சோமசுந்தரி நன்றி கூறினார். 'பெல்ஜியத்தின் தமிழும் தமிழரும்' என்ற தலைப்பில் பெல்ஜிய தமிழ்ச் சங்கத்தின் துணைச் செயலாளர் கிருஷ்ணகுமார் சோலைராஜ் பேசினார். பர்வீன் சுல்தானா பேசுகையில், உலகமெங்கும் உள்ள தமிழ் அமைப்புகளை இணைக்கும் பாலமாக உலக தமிழ்ச் சங்கம் உள்ளது. பல தமிழ் பறவைகள் உலகம் எனும் வானத்தில் பறக்கின்றன; அவர்களை இங்கு வரவைப்பதன் நோக்கம் மாணவர்களும் பறக்க வேண்டும் என்பதே என்றார். அல்அமீன் பள்ளி தலைமை ஆசிரியர் ஷேக் நபி, செயின்ட் மேரீஸ் பள்ளி தமிழாசிரியர் சந்திரன் உடன் இருந்தனர்.