உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தமிழ்க்கூடல் நிகழ்வு

தமிழ்க்கூடல் நிகழ்வு

மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்வு நடந்தது. ஆய்வுவள மையர் ஜான்சிராணி வரவேற்றார். சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமை வகித்தார். சி.எஸ்.ஐ., மகளிர் கலை, அறிவியல் கல்லுாரி உதவிப் பேராசிரியர் சோபியா முன்னிலை வகித்தார். தஞ்சாவூர் பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லுாரி உதவிப் பேராசிரியர் செம்பியன், தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்ற தலைப்பில் பேசினார். 'அண்ணாவின் கடிதங்கள் தனித்துவமானவை; அவர் எங்கும் தன்னை முன்னிலைப்படுத்தியது இல்லை' என்றார். ஆய்வறிஞர் சோமசுந்தரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !