உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தமிழ்க்கூடல் நிகழ்வு

தமிழ்க்கூடல் நிகழ்வு

மதுரை : மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்வு நடந்தது. ஆய்வறிஞர் சோமசுந்தரி வரவேற்றார். சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமை வகித்தார். என்.எம்.ஆர்., சுப்பராமன் மகளிர் கல்லுாரி முதல்வர் கோமதி முன்னிலை வகித்தார். சிவகாசி ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லுாரி உதவிப்பேராசிரியர் பத்மபிரியா, 'குறிஞ்சிப்பாட்டில் சூழலியல் சிந்தனைகள்' தலைப்பில் பேசினார். அவர் பேசுகையில், 'குறிஞ்சிப்பாட்டில் வரும் 99 வகை மலர்கள் கபிலரின் சூழலியல் சிந்தனையைக் குறிப்பிடுகிறது. நாய்க்கும், மனிதனுக்குமான தொடர்பை பாடல் ஒன்றில் கபிலர் தனித்துவமாக குறிப்பிட்டுள்ளார்' என்றார். ஆய்வுவள மையர் ஜான்சிராணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !