தமிழ்க்கூடல் விழா
மதுரை: மதுரை இளமனுார் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா தலைமையாசிரியை கனக லட்சுமி தலைமையில் நடந்தது. உதவித் தலைமையாசிரியர் இலசபதி முன்னிலை வகித்தார். மாணவி சக்தி பிரியா வரவேற்றார். தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் காந்திதுரை, 'தமிழ் இலக்கியங்களில் மனிதம்' என்ற தலைப்பில் பேசினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பேராசிரியர் காந்திதுரை புத்தகங்களை பரிசாக வழங்கினார். ஆசிரியர் மகேந்திர பாபு தொகுத்து வழங்கினார். மாணவி சவுமியா நன்றி கூறினார்.