| ADDED : நவ 15, 2025 05:02 AM
மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமையில், தமிழ்க்கூடல் நடந்தது. அல்அமீன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஷேக்நபி முன்னிலை வகித்தார். மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி உதவிப் பேராசிரியர் முனியசாமி பேசுகையில்,''ராமநாதபுரத்தில் பிறந்த முதுதமிழ்ப் புலவர் ராமதாசர், பள்ளிப் பருவத்திலேயே மூதுரை, நல்வழி உள்ளிட்ட நீதிநுால்களை பயின்றவர். 1937ல் மலேசியாவில் செந்தமிழ் பாடசாலையை உருவாக்கினார். 'நாட்டைக் காப்போம்', 'உரிமை முழக்கம்' உள்ளிட்ட நுால்களை இயற்றினார். தமிழ் தொண்டு செய்து சமூக விடியலுக்காக பாடுபட்டார்'' என்றார். சங்க ஆய்வறிஞர் சோமசுந்தரி ஒருங்கிணைத்தார். தமிழறிஞர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.