மேலும் செய்திகள்
நெல் கொள்முதலுக்கு புதிய ஆதார விலை அரசு நிர்ணயம்
31-Aug-2025
மதுரை: வாடகைப் பிரச்னையால் தமிழகத்தின் பருத்தியை மத்திய அரசு கொள்முதல் செய்ய முடியவில்லை. மற்ற மாநிலங்களைப் போல தமிழக அரசு வாடகை தர முன் வராதது ஏன் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கேள்வி எழுப்பினர். வேளாண் அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி இந்தாண்டு பருத்தி பரப்பளவு 3.24 சதவீதம் குறைந்துள்ளது. மரபணு மாற்றப்பட்ட பருத்தி பல ஆண்டுகளாக சந்தையில் உள்ளது. இதில் இளஞ்சிவப்பு காய்ப்புழு, வெள்ளை ஈ தாக்குதல், உள்நாட்டு பருத்தி விதைகள் கிடைக்காதது போன்ற காரணங்களால் பருத்தி சாகுபடி குறைகிறது. உள்நாட்டு பருத்தி விதைகளை அதிகரிக்காவிட்டால் இந்தியா பருத்தியை ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக இறக்குமதி செய்யும் நிலை ஏற்படும். மத்திய அரசு நடவடிக்கை எடுத்தாலும் தமிழகத்தில் பருத்தியை கொள்முதல் செய்ய முடியவில்லை. ஏனெனில் தமிழக அரசு வாகன வாடகை வழங்காததால், இங்கிருந்து மத்திய பருத்தி கழகம் கொள்முதல் செய்வதில்லை என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இருந்து பருத்தியை மத்திய அரசின் பருத்தி கழகம் கொள்முதல் செய்து தொழிற்சாலைகளுக்கு எடுத்து செல்கின்றன. அதற்கான வாகன வாடகையை அந்தந்த மாநில அரசுகள் ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் தமிழக அரசு அதை வழங்காததால் தமிழகத்தில் மத்திய பருத்தி கழகம் கொள்முதல் செய்வதில்லை. மற்ற மாநில அரசுகளைப் போல மத்திய பருத்தி கழகத்தின் வாகன வாடகையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழக பருத்தி விவசாயிகள் வாழ முடியும். தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்கா தனது பருத்தியை இந்திய சந்தையில் விற்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்துகிறது. இந்தியாவும் அதற்கு அனுமதி அளித்துள்ளது. இந்திய பருத்தி விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், விளையும் அனைத்து பருத்திகளையும் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் மத்திய அரசு முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும். தமிழகத்திற்கான வாகன வாடகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றார்.
31-Aug-2025