உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பச்சை குத்திய காதலியின் பெயர் சூடு வைத்து அழிப்பு

 பச்சை குத்திய காதலியின் பெயர் சூடு வைத்து அழிப்பு

மதுரை: மதுரையில் காதலியின் பெயரை கையில் பச்சை குத்தியதால், ஆத்திரமுற்ற பெண்ணின் பெற்றோர், இளைஞரின் கையில் சூடு வைத்து அழித்தனர். இதுதொடர்பாக பெண்ணின் தந்தை, அவரது மைத்துனர் கைது செய்யப்பட்டனர். மதுரை வில்லாபுரம் மாநகராட்சி காலனியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் இருளாண்டி, 22, ஆட்டோ டிரைவர். இவரது தாய்மாமன் வில்லாபுரம் நளசக்கரவர்த்தி, 44, லோடுமேன். இவரது மகளை இருளாண்டி காதலித்தார். இதற்கு நளசக்கரவர்த்தி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை பொருட்படுத்தாமல் தனது இடது கையில் மாமன் மகள் பெயரை பச்சை குத்தினார். இதுதொடர்பாக, இரு குடும்பத்தினர் இடையே பிரச்னை உருவானது. பச்சை குத்தியதை அழித்து விடுமாறு இருளாண்டியை நளசக்கரவர்த்தி குடும்பத்தினர் மிரட்டினர். இருளாண்டி கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து பேச்சுக்காக நளசக்கரவர்த்தியின் மைத்துனர் காசிராஜா, 32, என்பவர், தன் வீட்டிற்கு இருளாண்டியை அழைத்து வந்தார். அங்கு நளசக்கரவர்த்தி, மனைவி முருகேஸ்வரி, அவரது அக்கா முருகவள்ளி இருந்தனர். பச்சை குத்தியதை அழிக்காதது குறித்து அவர்கள் திட்டினர். கடைக்கு சென்று அழித்து விடுவதாக இருளாண்டி கூறினார். அதை ஏற்காத அவர்கள் சூடுவைத்து அழிக்க முடிவு செய்தனர். இருளாண்டி கையை நளசக்கரவர்த்தியும், காசிராஜாவும் பிடித்துக்கொள்ள, முருகேஸ்வரியும், முருகவள்ளியும் கரண்டியால் சூடுவைத்து பச்சை குத்திய எழுத்துக்களை அழித்தனர். இருளாண்டி வலியால் அலறி துடிக்க, சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் வந்து அவரை மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நளசக்கரவர்த்தி, காசிராஜாவை அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர். முருகேஸ்வரி உள்ளிட்டோரிடம் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ