உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயில் பொங்கல் விழா கொடியேற்றம்

கோயில் பொங்கல் விழா கொடியேற்றம்

பாலமேடு: பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோயில் பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக மார்ச் 10ல் மாரியம்மனுக்கு சாட்டுதல் விழா, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. நேற்று இரவு 7:00 மணிக்கு பத்ரகாளி அம்மனுக்கு சாட்டுதல் விழா, 8:30 மணிக்கு மாரியம்மன் கோயில் கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர். மார்ச்24 அம்மன் கண் திறப்பு, 25ல் அக்னிச்சட்டி, பால்குடம், 26ல் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை உறவின்முறை சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !