வாசகர்கள் கருத்துகள் ( 2 )
குஜராத் லிருந்து எண்ணூர் துறைமுகம் வழியாக மதுரை
இலவசங்கள் மற்றும் அதிக செலவில் நிர்வாகம் செய்து போக்குவரத்து கழகங்களை நாசமாக்கி விட்டார்கள்.
பஸ் ஸ்டாண்டுகளில் கிளம்பும்போதே அவற்றை தள்ளித்தான் கிளப்பிவிட வேண்டியுள்ளது. நடுவழியில் அவ்வப்போது மாமியாரிடம் முரண்டு பிடிக்கும் மருமகள் போல மேற்கொண்டு செல்லாமல் நின்று விடுகின்றன. வேகமாக செல்லும் பஸ்களோ 'பிரேக்' பிடிக்காமல் ஏதாவது குட்டிச்சுவரில் முட்டிக் கொண்டு நிற்பதும் உண்டு. மழைக்காலம் என்றால் அவ்வளவுதான். பஸ்சுக்குள் குடைபிடிப்பதற்கு பதில், பஸ்சுக்கே குடை பிடித்தால்தான் சீட்டில் உட்கார்ந்து பயணிக்கலாம் என்ற அளவில் உள்ளது.இந்த நிலையில்தான் 'பாடி' நலிந்த பல பஸ்கள் பயணிகளுக்கு மட்டுமல்ல 'சேவையாற்றி' அதிகாரிகளையும் காப்பாற்றுகின்றன. தகரடப்பா பஸ்கள் தடதடத்துச் செல்வதை பலரும் வேடிக்கைதான் பார்க்கின்றனர். இதுபோன்ற பஸ்களால் அவ்வப்போது விபத்துகள் நடக்கின்றன.நேற்று காலை 9:20 மணிக்கு பெரியார் பஸ் ஸ்டாண்ட் 'சிக்னல்' அருகே சென்ற ஒரு டவுன் பஸ் பிரேக் பிடிக்காமல் ஆட்டோக்கள் மீது அடுத்தடுத்து 'பாய்ந்தது'. இதில் 2 ஆட்டோக்கள் நசுங்கின. நல்லவேளையாக உயிர் சேதமில்லை. அதேபோல் நேற்று காலை திருப்பரங்குன்றத்தில் ஒரு டவுன் பஸ்சின் முன்பக்க 'பம்பர்' பகுதி கழன்று இழுத்துக்கொண்டே சென்றது. சத்தம் கேட்டு நிறுத்திய டிரைவர் அதை சரிசெய்து பஸ்சை கிளப்பிச் சென்றார். இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்வதால் பயணிகளுக்குத்தான் முதல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையை மாற்ற போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுப்பதில்லை.அதிகாரி ஒருவர் கூறியதாவது: பழைய பஸ்களை நீக்கிவிட்டு புதிய பஸ்களை இயக்கி வருகிறோம். 40க்கும் மேற்பட்ட, மாற்றுத் திறனாளிகளும் பயணிக்கும் வகையிலான புதிய தாழ்தள பஸ்களை இயக்கி வருகிறோம். இன்னும் 60க்கும் மேற்பட்ட பழைய பஸ்கள் ஓடுகின்றன. அவைக்கு பதில் டிசம்பருக்குள் புதிய பஸ்கள் வந்துவிடும். குஜராத் மாநிலத்தில் தயாரான 66 பஸ்கள் சென்னை எண்ணுார் துறைமுகத்தில் தயாராக உள்ளன என்றார்.
குஜராத் லிருந்து எண்ணூர் துறைமுகம் வழியாக மதுரை
இலவசங்கள் மற்றும் அதிக செலவில் நிர்வாகம் செய்து போக்குவரத்து கழகங்களை நாசமாக்கி விட்டார்கள்.