உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நடிகர் விஜய் வருகை உதயநிதிக்கு தான் சவால்

நடிகர் விஜய் வருகை உதயநிதிக்கு தான் சவால்

மதுரை: தமிழக அரசியலில் நடிகர் விஜய் வருகை தி.மு.க.,வுக்கு பலத்த அதிர்வை ஏற்படுத்தும். முதல்வர் கனவில் உள்ள உதயநிதிக்கு பெரும் சவாலாக அமையும் என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்தார்.

மதுரையில் நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:

ஜனநாயக நாட்டில் யாரும் அரசியல் கட்சி துவக்கலாம். மாநாடு நடத்தலாம். அந்த வகையில் நடிகர் விஜய் த.வெ.கழகம் துவங்கி, மாநாட்டில் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் விஜய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். குறிப்பாக அவரது வருகை தி.மு.க.,வுக்கு பெரும் அதிர்வை ஏற்படுத்தும். பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்படும். சீமான் கட்சி ஓட்டுகள் சிதறும். தற்போதே தி.மு.க., கூட்டணியில் உள்ள பல கட்சிகள் விஜய் கட்சிக்கு தாவ தயாராக உள்ளன. அக்கட்சிகளை முதல்வர் ஸ்டாலின் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்துகிறார்.நடிகர் விஜயால் அ.தி.மு.க.,வுக்கு பாதிப்பு இல்லை. அவருடன் அ.தி.மு.க., கூட்டணி அமையுமா என்பது குறித்து இப்போது தெரிவிக்க முடியாது. தற்போதைய நிலையில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தை வளர வளரத்தான் அதன் குணநலன்கள் தெரியும். அதுபோலத்தான் விஜய் தனது கொள்கைக்காக எந்த அளவில் போராட்டங்களை நடத்துகிறார் என்பதை பொறுத்தே முடிவு எடுக்கப்படும். அதுவரை அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம் என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி நிர்வாகிகளுக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார்.மதுரையில் பல ஆண்டுகளுக்கு பின் பெய்த அதிக மழையால் ரோடுகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளன. மழைநீர் செல்லும் கால்வாய்களை முறையாக துார்வாராததால் தான் செல்லுார், பந்தல்குடி, முல்லைநகர், ஆத்திகுளம் ஆகிய பகுதிகளில் மக்கள் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளனர். மதுரை மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.மதுரையில் ஏற்பட்ட வெள்ளத்தில் தி.மு.க., கரைந்து விட்டது. அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 2026ல் தி.மு.க., வெற்றி பெறும் என்ற ஸ்டாலின் கனவு பலிக்காது. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., கூட்டணியே வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

வைகுண்டேஸ்வரன்
அக் 28, 2024 21:52

விஜய் வரவால், உதயநிதியின் வெற்றியும் முதல்வர் ஆவதும் இன்னும் எளிதாகி விட்டது. திமுக வைப் பிடிக்காதாவர்களில் பலரும் வேண்டா வெறுப்பாகத் தான் EPS அல்லது பிஜேபி என்று போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இப்போ விஜய் பக்கம் சாயப் போகிறார்கள். திமுக காரன் ஆகாயமே இடிந்தாலும் திமுக விற்குத் தான் போடுவான். இந்த மாதிரி விசுவாசம் நிறைந்த வாக்குகள் தமிழ் நாட்டில் வேறு எந்த கட்சிக்கும் கிடையாது.


bhm
அக் 29, 2024 06:51

அப்பா வைகுண்டம் விசுவாசம் புல் அரிக்குது...200 ரூவா பேசுது அப்டியே இன்ப நிதி துணை முதல்வர் அப்டின்னு முட்டு குடு. இன்னும் 200 ரூவா கெடைக்கும்


Shekar Prakash
அக் 28, 2024 17:42

ரெட் ஜெயன்ட் போல இன்னுமொரு உதயநிதி கம்பெனி தான் த. வெ. க.


RAMAKRISHNAN NATESAN
அக் 28, 2024 14:59

தற்போதுவரை நடக்கும் பல அரசியல் நிகழ்வுகளைப் பார்த்தால் பாஜகவுக்கும் வரும் ஒண்ணேகால் வருடங்களில் ஒட்டு சதவிகிதம் கூடிவிடப் போவதில்லை.. திமுக மீதான அதிமுகவின் எதிர்ப்பில் உயிரோட்டமில்லை.. இருப்பினும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால் மக்களவைத் தேர்தல் வரை அதிமுகவின் சொந்த வாக்குவங்கியில் இழப்பு இல்லை ...தேர்தல் முடிவுகளில் மாற்றம் கொண்டு வரும் அளவுக்கு பாமக, தேமுதிக, விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு வரும் தேர்தலில் மதிப்பிருக்கப் போவதில்லை என்பது என் கருத்து .... பத்து வருடம் ஆட்சியில் இல்லாதிருந்தாலும் இன்னும் திமுக திருந்தலை என்றுதான் இந்த ஆட்சியைப் பார்த்துவிட்டு மக்கள் கருதுகிறார்கள் .... ஆகவே திமுகவுக்கு மாற்றாக மக்கள் அதிமுகவைத்தான் நினைக்கிறார்கள் .... டிவிகே கட்சி ஓட்டைபோடப்போவது அதிமுகவின் வாக்குவங்கி பலூனில்தான் .... அதனால்தான் சொல்கிறோம் மன்னர் குடும்பத்தால் இறக்கப்பட்ட கட்சிதான் டிவிகே ....


வைகுண்டேஸ்வரன்
அக் 28, 2024 21:48

உங்களின் அலசலும் கருத்தும் சரியானது தான். ஆனால் டி வி கே வை உருவாக்கியது திமுக என்று சொல்வது தான் தவறு. நீங்களே சொன்ன மாதிரி, திமுக வின் எதிரிகளின் எல்லா கூடாரங்களும் காலியாக சோபை இன்றி, சக்தியோ உத்தியோ இன்றி நோயாளிகள் போல பலவீனமாக இருப்பது தான் நிஜம். நிலைமை இப்படி இருக்கும் போது திமுக ஏன் விஜய் க்காக பணம் செலவழிக்க வேண்டும்? இவனுங்க ஜெயிச்சு கியிச்சு தொலைச்சானுங்கன்னா அதுவேற ஒரு தலவேதனை. வேலியில் கிடக்கிற ஓணானை எடுத்து வேட்டிக்குள்ள வுட்டுக்க திமுக என்ன அவ்வளவு அனுபவமில்லாத அறைவேக்காட்டு கட்சியா?


magan
அக் 28, 2024 14:48

சும்மா இருந்தவனை சொறிஞ்சி விட்டதே இந்த திருட்டு கழகம் தான் இப்ப விஜய்


Prabaharan
அக் 28, 2024 12:16

அப்போ முதல்வர் பதவி உதயநிதிக்கும் விஜய்க்கும் தான் நீங்க அந்த லிஸ்ட்ல இல்ல அப்படித்தானே.


சமீபத்திய செய்தி