மேலும் செய்திகள்
தரைப்பாலம் இடிந்தும் கண்டுகொள்ள ஆளில்லை
23-Dec-2024
திருநகர்: திருநகர் - பாலசுப்பிரமணியன் நகர் இணைப்பு தரைப்பாலம் மீண்டும், மீண்டும், சேதமடைந்தாலும் ஒட்டுப்போடுகின்றனரே தவிர நிரந்தர தீர்வுக்கு எந்த நடவடிக்கையும் இல்லையென பொதுமக்கள் குறைகூறினர்.திருநகர் 7 வது பஸ் ஸ்டாப்பில் இருந்து பால சுப்பிரமணியன் நகர் செல்லும் வழியில் நிலையூர் கால்வாய் மேல் தரைப்பாலம் உள்ளது. திருநகரின் ஒரு பகுதியில் இருந்து பாலசுப்ரமணியன் நகர், பாலாஜி நகர், ஹார்விபட்டிக்கு செல்வோர் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதிகளவில் பள்ளி வாகனங்களே செல்கின்றன.பாலசுப்பிரமணியர் நகர் விரிவாக்க பகுதியில் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. அதற்காக தினமும் நுாற்றுக்கணக்கான லாரிகள் சென்று திரும்புகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தின் ஒரு முனையில் சேதமடைந்து பெரிய ஓட்டை விழுந்தது. தினமலர் செய்தி வெளியிட்டது. இதையடுத்து ஓட்டையை சிமென்ட் பூசி தற்காலிகமாக அடைத்தனர். அன்று முதல் 2 மாதங்களுக்கு ஒரு முறை அதே இடத்தில் ஓட்டை விழுவதும், சேதமடைந்த பகுதியை சிமென்டால் பூசுவதும் தொடர் கதையாகி விட்டது.நாளுக்கு நாள் இந்த சேதாரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டிய அந்த தரைப்பாலம் முழுவதும் சேதம் அடைந்தால் 2 கி.மீ., சுற்றித்தான் வர வேண்டும். வாகனங்கள் செல்லும் பொழுது பாலம் சேதம் அடைந்தால் கால்வாய்க்குள் விழும் ஆபத்தும் உள்ளது.பாலம் முழுமையாக சேதமடைந்து, விபரீதம் ஏற்படும் முன்பு முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அந்தப் பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். வாகனங்களை ஹார்விபட்டி எதிரே உள்ள தேவி நகர் ரோட்டின் வழியாக செல்ல அனுமதிக்க வேண்டும்.
23-Dec-2024