உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குப்பை தீயால் குடிசை சாம்பல்

குப்பை தீயால் குடிசை சாம்பல்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் கள்ளர் விடுதி எதிர்புறம் விவசாயி இஸ்ரவேல் 65, அங்கம்மாள் தம்பதியர் வீடு உள்ளது. வீட்டின் மேற்பகுதியில் குடிசை போட்டு பழைய மரச்சாமான்கள், வைக்கோல் போன்றவற்றை வைத்திருந்தனர். வீட்டின் பின்பகுதியில் தரிசு நிலத்தில் கிடந்த குப்பையில் யாரோ தீ வைத்துள்ளனர். இதனால் காற்றில் பரவிய தீ, மாடியில் இருந்த குடிசையிலும் பற்றி எரிந்தது. குடிசை எரிந்து பக்கத்தில் விழுந்ததில் மற்ற வீடுகளுக்கும் தீ பரவும் நிலை உருவானது. உசிலம்பட்டி போலீசார், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து பரவாமல் தடுத்தனர். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை