உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் பள்ளியை ஆய்வு செய்த ஐ.ஜி.,

போலீஸ் பள்ளியை ஆய்வு செய்த ஐ.ஜி.,

மதுரை: தமிழ்நாடு போலீஸ் துறையில் 2ம் நிலை காவலர் பணிக்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 1890 ஆண்கள், 804 பெண்கள் என 2694 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான அடிப்படை பயிற்சி மதுரை உட்பட 8 இடங்களில் டிச.4 ல் துவங்க உள்ளது. ஒழுக்கம், கவாத்து பயிற்சி, சட்ட வகுப்பு, துப்பாக்கி சுடுதல், தற்காப்பு கலை, யோகா, ஓட்டுனர் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.போலீஸ் பயிற்சி பள்ளியின் ஐ.ஜி., ஜெயகவுரி நேற்று மதுரை பயிற்சி பள்ளிக்கு வந்தார். புதிய போலீசாருக்கு பயிற்சி அளிக்கும் பயிற்றுனர்களுக்கு அறிவுரை வழங்கினார். பயிற்சியாளர் தங்குமிடம், உணவு, கவாத்து மைதானம், வகுப்பறையை நேரில் பார்வையிட்டார். பள்ளி முதல்வர் உன்னி கிருஷ்ணன், துணை முதல்வர் மாரியப்பன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி