உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தண்ணி காட்டிய இயந்திரம் ரூ.10 லட்சம் வீண்

 தண்ணி காட்டிய இயந்திரம் ரூ.10 லட்சம் வீண்

மேலுார்: செமினிப்பட்டியில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதால் மக்கள் குடிநீரை தேடி அலையும் அவலம் நிலவுகிறது. இந்த ஊராட்சியில் முத்துச்சாமி பட்டி, நெய்க்காரக்குடிபட்டி, சுமதிபுரம் என 6 கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி போர்வெல் தண்ணீர் அதிக உப்பாக இருப்பதால் குடிநீராக பயன்படுத்த முடியாது. அதனால் 2019 ல் முத்துச்சாமி பட்டியில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் ரூ.10 லட்சத்தில் நிறுவப்பட்டது. ஆனால் அடிக்கடி இயந்திரம் பழுதாவதால் மக்கள் குடிநீருக்காக அவதிப்படுகின்றனர். கிராமத்தினர் கூறியதாவது: சுத்திகரிப்பு இயந்திரத்தில் குடம் ரூ.5க்கு விலை கொடுத்து வாங்கிய நிலையில் ஆறு மாதமாக இயந்திரம் பழுதானதால் லாரிகளில் ஒரு குடம் ரூ.15 க்கு வாங்குகிறோம். உப்பு தண்ணீரால் கிட்னி பாதிக்கும் அபாயம் உள்ளதால் குடிநீருக்காக வருமானத்தில் அதிகம் செலவிடுகிறோம். மாவட்ட நிர்வாகம் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர். ஊராட்சி செயலர் சுரேஷ் கூறுகையில், ஏற்கனவே மோட்டார் பழுதானதால் சரி செய்தோம். தற்போது சென்சார் போர்டு சரி செய்ய ரூ. 80 ஆயிரம் தேவைப்படுவதால் வரி வசூல் செய்து 2 மாதங்களில் சரி செய்யப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை