மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி // டிச.29 மதுரை
20 hour(s) ago
ஒருங்கிணைந்த நீர்நிலைகள் பறவைகள் கணக்கெடுப்பு
29-Dec-2025
ராமகிருஷ்ணர் பக்தர்கள் மாநாடு
29-Dec-2025
வாவிடமருதுார் வராத அரசு பஸ்
29-Dec-2025
மேலுார்: பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு மேலுார் பகுதிகளில் வெல்லம் விற்பனை துவங்கிய நிலையில், விலை குறைவால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். பொங்கல் பண்டிகையில் வெல்லத்திற்கு முக்கிய பங்கு உண்டு. மேலுார் பகுதி யில் செங்கரும்பு, ஆலைக் கரும்பு என இருவகை கரும்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் செங்கரும்பு ருசித்து சுவைக்கவும், ஆலை கரும்பு வெல்லம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பொங்கல் நெருங்குவதையொட்டி மேலுார் அருகே கொட்டக்குடி, வெள்ளலுார் பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. விவசாயி மதயானை கூறிய தாவது: ஆலைக் கரும்பு நடவு செய்வது முதல் வெல்லம் தயாரிப்பது வரை ஏக்கருக்கு ரூ.1.65 லட்சம் செலவு செய்தால் 3 ஆயிரத்து 500 கிலோ வெல்லம் கிடைக்கிறது. தற்போது ஒரு கிலோ வெல்லம் ரூ.45 வீதம் ரூ.1.57 லட்சம்தான் கிடைக்கும் என்பதால், நஷ்டம் அடைகிறோம். அரசு கொள்முதல் நிலையம் அமைத்து விலையை நிர்ணயம் செய்வதோடு இடுபொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என்றார்.
20 hour(s) ago
29-Dec-2025
29-Dec-2025
29-Dec-2025