உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 58 கால்வாயில் தண்ணீர் தேனி எம்.பி., உறுதி

58 கால்வாயில் தண்ணீர் தேனி எம்.பி., உறுதி

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து தேனி எம்.பி., தங்கத் தமிழ்ச்செல்வன் ஆய்வு செய்தார். நகராட்சி தலைவர் சகுந்தலா, துணைத் தலைவர் தேன்மொழி, கமிஷனர் இளவரசன், தி.மு.க., நகர் செயலாளர் தங்கப்பாண்டியன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். எம்.பி., கூறியதாவது: உசிலம்பட்டி நகரில் தண்ணீர் வழங்கவில்லை என கோரிக்கை வைத்தனர். அனைத்து வார்டுகளிலும் ஆழ்துளை கிணறுகளை சரிசெய்யும்படி நகராட்சியிடம் கேட்டுள்ளேன். உசிலம்பட்டி கண்மாயை சீரமைத்து நடைபாதை அமைக்க ரூ. 11 கோடி நிதி கேட்டுள்ளோம். உசிலம்பட்டி பஸ்ஸ்டாண்ட் விரிவாக்க பணி நடக்கிறது. இன்னும் 15 நாட்களில் கிடைக்கும் நீதிமன்ற உத்தரவுப்படி விரிவாக்க இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி விரைவில் பணிகள் நடைபெறும். 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க மதுரை கலெக்டர் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மண்டல பொறுப்பாளர் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் பேசியுள்ளோம். விரைவில் வைகை அணையில் இருந்து 58 கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை