மேலும் செய்திகள்
'முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை'
05-Jul-2025
அவனியாபுரம்: 'தி.மு.க., வரவேண்டாம் என்ற எண்ணம் உள்ளவர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்,' என பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது: அஜித்குமார் கொலை வழக்கை முதன் முதலில் வெளியே கூறியது நான்தான். அதன் பின்பு தான் மற்ற கட்சியினர் வந்தனர். இப்போது அஜித்குமார் வீட்டிற்கு அனைவரும் செல்கின்றனர்.தமிழக முதல்வர் ஓரணியில் தமிழ்நாடு என்று கூறுகிறார். இதனால் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம் என்பதை கூட்டணியில் இருப்பவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்றால், தி.மு.க., வரவேண்டாம் என்ற எண்ணம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்கள் எல்லாம் ஓரணியில் திரள வேண்டும். தி.மு.க.,வை வீழ்த்த அனைவரும் சேர வேண்டும் என்பது எங்களுடைய நோக்கம். வருவதும் வராததும் அவரவர் விருப்பம்.தி.மு.க., கூட்டணியில் நான் சலசலப்பை ஏற்படுத்துகிறேன் எனக் கூறுகின்றனர். என்னை பொறுத்தமட்டில் திருமாவளவனாக இருந்தாலும், செல்வபெருந்தகையாக இருந்தாலும், முதல்வர் ஸ்டாலினாக இருந்தாலும் அனைவரிடமும் நட்புணர்வுடன்தான் பழகுகிறேனே தவிர சலசலப்பை ஏற்படுத்துவது எனது வேலை இல்லை.ஆனால் முதல்வர் கடமையிலிருந்து தவறுகிறார் எனும் போது ஒரு கட்சியினுடைய தலைவராக செயல்படுவது எனது கடமை என்றார்.
05-Jul-2025