வி.சி., கொடிக்கம்பம் சர்ச்சை மதுரையில் மூவர் சஸ்பெண்ட்
மதுரை:மதுரை மாவட்டம், வெளிச்சநத்தம் கிராமத்திற்கு வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் சில நாட்களுக்கு முன் வந்த போது, கொடியேற்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அனுமதியின்றி கொடிக்கம்பம் நடுவதாகக் கூறி போலீசார், வருவாய்த்துறையினர் தடுத்ததால் அங்கு பிரச்னை உருவானது.அரசியல் கட்சிகளின் கொடிக்கம்ப பிரச்னையில் போலீசார் அனுமதி வழங்குவர் என்றாலும், வருவாய் அலுவலர்கள் மீதே துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பணி பாதுகாப்பு வேண்டும் என, வருவாய் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி, கலெக்டரை சந்தித்து முறையிட்டனர்.இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி, கிராம உதவியாளர் பழனியாண்டி, வி.ஏ.ஓ., பரமசிவம், வருவாய் ஆய்வாளர் அனிதா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.