உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / த.மா.பகுஜன் சமாஜ் ஆர்ப்பாட்டம்

த.மா.பகுஜன் சமாஜ் ஆர்ப்பாட்டம்

மதுரை: ஜாதி ஆணவப் படுகொலைகளை கண்டித்து மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆதிதிராவிடர் கிறிஸ்துவர் கூட்டமைப்பு தலைவர் செபாஸ்டியன் சூசைராஜ் தலைமை வகித்தார். ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தலைமையில் குழு அமைக்க வேண்டும் எனக் கோரி கோஷமிட்டனர். மாநில தலைவர் மைக்கேல்தாஸ், வழக்கறிஞர் மனோகரன், கொள்கை பரப்பு செயலாளர்கள் சமரன், ஸ்மைலி தபு, பொருளாளர் சரவணன், துணை பொதுச்செயலாளர்கள் மார்க்ஸ் ரவீந்திரன், ராஜா பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ரவிக்குமார், மனோ நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி