| ADDED : நவ 22, 2025 04:26 AM
மதுரை: 'எஸ்.ஐ.ஆர்., பணியில் ஓட்டுச்சாவடியில் வாக்காளர்களுக்கு உதவ இன்றும், நாளையும் (நவ.22,23) உதவி மையங்கள் செயல்படும் என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் கணக்கீட்டுப் படிவங்கள் வீடுவீடாக வழங்கப் பட்டுள்ளன. இதனை பூர்த்தி செய்து வழங்கும் பணியை எளிமைப்படுத்தும் வகையில் இன்றும், நாளையும் அனைத்து ஓட்டுச்சாவடி மையங் களிலும் உதவி மையம் செயல்பட உள்ளது. காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை வாக்காளர்கள் பூர்த்தி செய்த படிவங்களை வழங்கலாம். கணக்கீட்டு படிவம் கிடைக்காதவர்கள் இம்மையத்தில் பெறலாம். வாக்காளர்களுக்கு உதவிட தன்னார்வலர்கள், ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் குடும்பத்தில் ஒருவரின் அடையாள அட்டையை பயன்படுத்தி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் எளிதாக தங்கள் படிவங்களை பூர்த்தி செய்யலாம் என தெரிவித்துள்ளார்.