இன்று ஏகதின லட்சார்ச்சனை
மதுரை:புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு மதுரை பெசன்ட் ரோட்டில் உள்ள காஞ்சி காமகோடி மடத்தில் ஏகதின லட்சார்ச்சனை காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பத்துடன் துவங்குகிறது. 7:45 மணிக்கு லட்சார்ச்சனையும், 11:45 மணிக்கு மகா தீபாரானையும் நடக்கின்றன. 12:00 மணிக்கு பிரசாதம் வழங்கப்படும். மாலை 5:30 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், பஜனை நடக்கின்றன. ஏற்பாடுகளை ஸ்ரீஹரிபக்த சமாஜம் குழுவினர் செய்துள்ளனர்.