கோயில்சித்திரைத் திருவிழா - --- பால்குடம், அக்னி சட்டி எடுத்தல்: தொட்டிச்சி அம்மன் கோயில், மேலுார், காலை 7:00 மணி.சித்திரைத் திருவிழா - -அம்மன் தேரில் எழுந்தருளுதல்: பிடாரி அம்மன் கோயில், திருவாதவூர், மாலை 4:45 மணி.பக்தி சொற்பொழிவுதிருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் - பார்வதியம்மாள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.ஆதிசங்கரர் அருளிய விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் - திண்டுக்கல் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.பொதுஓய்வுபெற்ற அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேலுக்கு பாராட்டுவிழா: ராம் ரத்னா ரெசிடென்சி, மதுரை, சிறப்பு விருந்தினர்: முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநர் சண்முகசுந்தரம், பங்கேற்பு: தலைவர் ஜெயசீலன், செயலாளர் தினேஷ் குமார், பொருளாளர் பாஷா, ஏற்பாடு: மதுரை மீனாட்சி ரோட்டரி சங்கம், மாலை 6:30 மணி. இயலாதோருக்கு உணவளிக்கும் மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்டின் 4ம் ஆண்டு துவக்க விழா: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: ஆடிட்டர் சேது மாதவா, சிறப்பு விருந்தினர்: சட்டசபை எதிர்கட்சி துணைத் தலைவர் உதயகுமார், ஏற்பாடு: நிறுவனர் நெல்லை பாலு, காலை 8:30 மணி.மருத்துவம்குடல், கல்லீரல் இலவச பரிசோதனை முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.