உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 28 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 28 க்குரியது

கோயில் ஆண்டு உற்ஸவம்: ராஜ நாகம்மாள் கோயில், ரோஜா தெரு, சத்ய சாய் நகர் தெற்கு, மதுரை, பால்குடம் எடுத்தல், பால் அபிஷேகம், விசேஷ ஆராதனை, காலை 8:00 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி, பொங்கல் வைத்தல், மாலை 4:00 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்தரை வீதி, மதுரை, காலை 7:30 மணி. ஆடிப்பூரம் விழா மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, உற்ஸவ - மூலஸ்தான அம்மன்களை ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி, அம்மன் கமல வாகனத்தில் ஆடி வீதிகளில் உலா, இரவு 7:00 மணி. ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயில், கான்பாளையம் குறுக்குத் தெரு, மதுரை, ஹோமம், அபிஷேகம், ஆராதனை, காலை 7:00 மணி, திருவிளக்கு பூஜை, மாலை 5:30 மணி. காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம், பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, நித்ய பூஜை, காலை 7:00 மணி, காமாட்சி அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், காலை 9:00 மணி, சஹஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:00 மணி, பிரசாதம் வழங்குதல், இரவு 7:00 மணி. செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, மீனாட்சி அம்மனுக்கு வளையல் சாத்துதல், காலை 9:00 மணி. பக்தி சொற்பொழிவு திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி. சதஸ்லோகி: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி. பள்ளி, கல்லுாரி இயற்பியல் கருத்தரங்கம்: சவுராஷ்டிரா கல்லுாரி, விளாச்சேரி மெயின் ரோடு, பசுமலை, தலைமை: முதல்வர் ஸ்ரீநிவாசன், சிறப்புரை: எம்.சி.ஏ.,துறைத் தலைவர் அனுராதா, மதியம் 2:30 மணி. ஆலோசனை குறித்த முதுகலை பட்டயப்படிப்பு துவக்க விழா: மதுரை சமூக அறிவியல் கல்லுாரி, அழகர்கோவில் ரோடு, மதுரை, தலைமை: செயலாளர் தர்மசிங், சிறப்பு விருந்தினர்: மதுரை மருத்துவக் கல்லுாரி மனநல டாக்டர் கீதாஞ்சலி, மாலை 5:00 மணி. நிலையான சமூகங்களை உருவாக்குதல் குறித்து கருத்தரங்கு: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: திருச்சி ஜோசப் கல்லுாரி விரிவாக்கத்துறை மூத்த ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன், மதியம் 12:15 மணி. பொது மடீட்சியா சார்பில் 'இண்ட் எக்ஸ்போ' தொழில் கண்காட்சி - நிறைவு விழா: ஐடா ஸ்கட்டர், ரிங் ரோடு, மதுரை, தலைமை: தலைவர் கோடீஸ்வரன், சிறப்பு விருந்தினர்கள்: போலீஸ் கமிஷனர் லோகநாதன், மாநகராட்சி கமிஷனர் சித்ரா, தொழில்முனைவு மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குநர் அம்பலவாணன், காலை 11:30 மணி, கண்காட்சி நேரம்: காலை 10:30 முதல் இரவு 7:30 மணி வரை. வீட்டுக் கடன் திருவிழா: எஸ்.பி.ஐ., வங்கி, அரசரடி கிளை, மதுரை, காலை 10:00 முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை