மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை
27-Sep-2025
கோயில் நவராத்திரி விழா நிறைவு: உச்சினி மாகாளியம்மன் கோயில், நேதாஜி ரோடு, மதுரை, சாந்தாபிஷேகம், மாலை 6:00 மணி. நவராத்திரி விழா நிறைவு: சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, அம்பாளுக்கு விசேஷ ஹோமம், மாலை 4:15 மணி, சாந்தாபிஷேகம், மாலை 6:00 மணி, பூ பாவாடை சாத்துதல், இரவு 7:00 மணி. வள்ளலார் அவதார தின சிறப்பு பூஜை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, ஏற்பாடு: அமைப்பாளர் வேங்கடராமன், காலை 11:00 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி. பக்தி சொற்பொழிவு லட்சுமிக்கு விசேஷ பூஜை, பஜனை: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி. திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. பள்ளி, கல்லுாரி காந்தி ஜெயந்தி விழா: மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் வானதி, சிறப்புரை: மதுரை இலக்கிய மன்ற நிறுவனர் அவனி மாடசாமி, காலை 10:30 மணி. பொது மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, பங்கேற்பு: கலெக்டர் பிரவீன் குமார், காலை 10:00 மணி. ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: இணைப்பதிவாளர் அலுவலகம், பழங்காநத்தம், மதுரை, ஏற்பாடு: மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம், காலை 11:00 மணி. ஜி.எஸ்.டி., விழிப்புணர்வு நிகழ்ச்சி: மடீட்சியா ஹால், மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: சாட்டர்டு அக்கவுன்டன்டுகள் பாலசுப்பிரமணியம், சரவணகுமார், மாலை 5:00 மணி. 'உரிமை மீட்க தலைமுறை காக்க' - பா.ம.க., பொதுக்கூட்டம்: புதுார் பஸ் ஸ்டாண்ட், மதுரை, பங்கேற்பு: பா.ம.க., தலைவர் அன்புமணி, மாலை 6:00 மணி, வைகை ஆற்றை பார்வையிடல், காலை 11:00 மணி. காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு, பசுமையாக்குதல் திட்டம்: புல்லுாத்து மையம், துவரிமான், மதுரை, சிறப்பு விருந்தினர்: மாவட்ட வன அலுவலர் ரேவ்டி ராமன், களஞ்சிய பரஸ்பர இயக்கம் நிறுவனர் சின்னப்பிள்ளை, தமிழக வனத்துறை உயிர்ப்பன்மை திட்ட இயக்குநர் பிரஷாந்த், ஏற்பாடு: தானம் மக்கள் கல்வி நிலையம், காலை 9:30 மணி. காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பிரசார வாயிற்கூட்டம் : வணிகவரித்துறை அலுவலகங்கள் முன், சட்டக்கல்லுாரி ரோடு, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு வணிகவரி அலுவலர், துணை வணிகவரி அலுவலர்கள் சங்கம், காலை 10:00 மணி. விளையாட்டு கல்லுாரி மாணவ, மாணவியருக்கான மாநில அளவிலான முதல்வர் கோப்பை அத்லெட்டிக் போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, காலை 6:30 மணி முதல். கண்காட்சி மான்சரோவர் ஆடைக் கண்காட்சி: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. ஆடவர், பெண்கள், குழந்தைகளுக்கான ஆடைகள் கண்காட்சி, விற்பனை: ராஜா முத்தையா மன்றம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 10:00 மணி வரை.
27-Sep-2025