உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மன்னர் கல்லுாரியில் வர்த்தக கண்காட்சி

மன்னர் கல்லுாரியில் வர்த்தக கண்காட்சி

திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப்பிரிவு வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை சார்பில் வர்த்தக கண்காட்சி நேற்று துவங்கியது. தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன் துவக்கி வைத்தார். பொருளாளர் ஆழ்வார்சாமி, முதல்வர் ராமசுப்பையா, இயக்குனர் பிரபு, துறைத்தலைவர் நாகசுவாதி முன்னிலை வகித்தனர்.பேராசிரியர்கள் ராஜாமணி, மஞ்சுளா, தேன்மொழி, நந்தினீஸ்வரி, சுப்பிரமணியராஜா, பிரடிபிளெஸன், தினேஷ் குமார், ஒருங்கிணைத்தனர்.மதுரையின் முன்னணி நிறுவனங்களின் வீட்டு உபயோகப் பொருட்கள், ஆட்டோ மொபைல்ஸ், நர்சரி பொருட்கள், புத்தகங்கள், டெக்ஸ்டைல்ஸ், விளையாட்டு சாதனப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், அழகுசாதனங்கள், பல வகை உணவுகள் உட்பட கல்லுாரி மாணவர்களின் தயாரிப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !