உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போக்குவரத்து விழிப்புணர்வு

போக்குவரத்து விழிப்புணர்வு

மதுரை: மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் போக்குவரத்து போலீசார் சார்பில் போக்குவரத்து, போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. உதவி கமிஷனர் இளமாறன், இன்ஸ்பெக்டர் தங்கமணி, 'மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் பயணிப்பதால் ஏற்படும் விபத்துகள், போதைப்பொருள் விபரீதங்கள்' பற்றியும் பேசினர். இறுதியில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். தலைமை ஆசிரியர் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர். * பெரியார் பஸ் ஸ்டாண்டில் துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர்கள் செல்வின், இளமாறன், மாவட்ட இளஞ்சிறார் நீதிமன்ற குழும உறுப்பினர் பாண்டியராஜன், இன்ஸ்பெக்டர்கள் தங்கமணி, நந்தகுமார், பூர்ணகிருஷ்ணன், வாகன ஆய்வாளர் மனோகரன் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி