மரங்கள் கடத்தல்: நடவடிக்கை கோரி வழக்கு
மதுரை: திருமங்கலம் அருகே மேல உரப்பனுார் செல்லமணி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மேல உரப்பனுாரில் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதில் அரசின் அனுமதியுடன் ஊராட்சி சார்பில் நாடகமேடை அமைக்கப்பட்டுள்ளது. மீதி நிலத்திலிருந்த 2 வேப்பமரங்களை சிலர் சட்டவிரோதமாக அகற்றினர். ஆக்கிரமித்து கட்டுமானம் மேற்கொள்கின்றனர். இதனால் நாடக மேடையை பன்பாட்டிற்கு கொண்டுவர முடியவில்லை. கலெக்டர், எஸ்.பி.,திருமங்கலம் தாசில்தாருக்கு புகார் அனுப்பினேன். மரங்களை வெட்டி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: மனுவை அதிகாரிகள் 3 மாதங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.