விவசாயிகளுக்கு பயிற்சி
கொட்டாம்பட்டி : பொள்ளாச்சியில் தென்னை ஆராய்ச்சி நிலையம் மற்றும் வானவராயன் கல்லுாரியில் விவசாயிகளுக்கு தென்னை குறித்து மூன்று நாள் பயிற்சி முகாம் நடந்தது. கொட்டாம்பட்டி அட்மா திட்டம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜதுரை, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் கண்ணன், சத்யா, கீர்த்தனா உள்ளிட்டோர் தலைமையில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு தென்னையில் நடவு முறை, உரம், நுண்ணுாட்டச்சத்து, நோய், பூச்சி தாக்குதல், தென்னையில் கிடைக்கும் பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் தேனரசு இயற்கை வேளாண் பண்ணை, தென்னை நாற்றுப்பண்ணையில் நெட்டை, குட்டை ரகம் குறித்து விவசாயிகள் வயல் ஆய்வு செய்தனர்.