டங்ஸ்டன் திட்டம் ரத்து பொங்கல் வைத்து வழிபாடு
மேலுார்: அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கிராம மக்கள் இளம நாயகி அம்மன் கோயிலில் ஒன்று கூடினர். பிறகு கும்மியடித்து, குலவையிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். இவ்விழாவில் அரிட்டாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பெரியாறு வைகை ஒருபோக பாசன சங்க விவசாயிகள், டங்ஸ்டன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.