உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இரண்டரை மணி நேர மறியல் மாணவர்கள், மக்கள் அவதி

இரண்டரை மணி நேர மறியல் மாணவர்கள், மக்கள் அவதி

அவனியாபுரம் : வலையங்குளத்தில் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடு பட்டதால் இரண்டரை மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் வலையங்குளம் பகுதியில் அடிக்கடி சாலை விபத்து நடந்த தால் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி சில மாதங்களாக நடக்கிறது. ரோட்டை கடக்க பாலத்தின் மையத்தில் 20 அடி அகலத்தில் வாகனங்கள் செல்வதற்காக பாதை அமைக்கப்பட்டு பணி நடக்கிறது. அந்த சுரங்கப்பாதையை 40 அடி அகலத்தில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நேற்று காலை 8:00 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஏ.எஸ்.பி., அன்சூர் நாகர் தலைமை யில் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இரண்டரை மணி நேரம் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொது மக்கள் அவதியடைந்தனர். கோரிக்கைகள் குறித்து முறையிட பல்வேறு வழிகள் இருக்கும்போது மற்றவர்களுக்கு இடை யூறாக 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் போராடுவதை இனியாவது தவிர்க்க வேண்டும் என அவதிக்குள்ளான மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ