| ADDED : நவ 28, 2025 07:51 AM
மதுரை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியையொட்டி ஓட்டுச்சாவடி மையங்களில் நாளையும், நாளை மறுநாளும் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன. மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (எஸ்.ஐ.ஆர்.,) நடந்து வருகின்றன. வீடுகளில் கணக்கீட்டுப் படிவங்கள் கொடுக்கப்பட்டு, பூர்த்தி செய்த படிவங்களை திரும்பப் பெற்று வருகின்றனர். கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கும் பணியை எளிமைப்படுத்த அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் ஏற்கனவே நடத்தப்பட்டது. தற்போது மீண்டும் வரும் சனி (நவ.29), ஞாயிறு (நவ.30) ஆகிய 2 நாட்கள் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்க உள்ளது. படிவங்களை நிரப்புவதில் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். http://bit.ly/voters.madurai, http:// madurai.nic.in/sir-mdu என்ற இணையதளத்தில் வாக்காளர் விவரங்களை உள்ளீடு செய்தும் தெரிந்து கொள்ளலாம். மேலும் http://voters.eci.gov.inஎன்ற இணையதளத்திலும் குடும்ப உறுப்பினர்கள் பழைய வாக்காளர் அட்டை அல்லது 2005, 2002 ல் ஓட்டளித்த சட்டமன்றம், ஓட்டுச்சாவடி பெயர் விவரங்களை பயன்படுத்தியும் தகவல்களை பெறலாம். இதைப்பயன்படுத்தி குடும்ப உறுப்பினர் அனைவரது விவரங்களையும் பெறலாம் என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.