உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அய்யங்கோட்டையில் திறக்கப்படாத அங்கன்வாடி மையம்

அய்யங்கோட்டையில் திறக்கப்படாத அங்கன்வாடி மையம்

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் அய்யங்கோட்டை ஊராட்சி அய்யனார்புரம் அரசு உயர்நிலைப் பள்ளி அருகே இருந்த அங்கன்வாடி மையம் 4 ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்தது.இதனால் மையம் வறுமை ஒழிப்பு கட்டட வளாக வராண்டாவில் 3 ஆண்டுகளாக செயல்பட்டது.இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக ஊராட்சி துணை தலைவர் முருகேசன் தனது ஓட்டு வீட்டில் இலவசமாக மையம் செயல்பட அனுமதித்தார். அங்கு இட வசதி இல்லை. இதனால் 30க்கு பதில் 20 குழந்தைகள் மட்டுமே வருகின்றனர். தற்போது புதிதாக மையம் கட்டப்பட்டு ஒன்றரை மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. இந்த மையத்தின் அருகே பழமையான பழுதடைந்த மேல்நிலை தொட்டி மற்றும் கிணறு உள்ளதால் மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து திறக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை