உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வாஜ்பாய் பிறந்தநாள்: பா.ஜ., கொண்டாட்டம்

வாஜ்பாய் பிறந்தநாள்: பா.ஜ., கொண்டாட்டம்

மதுரை: மதுரை தவிட்டுச் சந்தையில் பா.ஜ.,சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நுாறாவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் துரை பாலமுருகன், இளங்கோமணி, நெசவாளர் அணி மாநில செயலாளர் ஆஷாராணி, ஓ.பி.சி.அணி லட்சுமிநாராயணன், மாவட்ட செயற்குழு ராம்குமார், பிரகாஷ்குருசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

திருமங்கலம்

பன்னிக்குண்டு ஊராட்சியில் பா.ஜ., தெற்கு ஒன்றிய தலைவர் சரவணன் தலைமையில் கொண்டாடப்பட்டது. வாஜ்பாயின் நல்லாட்சி, அவரது திட்டங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. மண்டல் பொதுச் செயலாளர் பிரகாஷ், துணைத் தலைவர்கள் விஜய் ஆனந்த் பங்கேற்றனர்.கள்ளிக்குடி கிழக்கு மண்டலத்தில் கல்லணை, கூடக்கோவில், டி.புதுார் கிளைகளில் மண்டல் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் கொண்டாடப்பட்டது. கிளைத் தலைவர்கள் அய்யாவு, முத்துக்கருப்பன், அண்ணாமலை, வைரமுத்து, மகாலிங்கம் பங்கேற்றனர்.

வாடிப்பட்டி

சமயநல்லுாரில் மண்டல் தலைவர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட தலைவர் ராமதுரை, மண்டல் துணைத்தலைவர் அனுசுயா, செயற்குழு உறுப்பினர் முருகன், பொதுச் செயலாளர் லோகநாதன், இளைஞரணி மாவட்ட தலைவர் சிவராமன், முன்னாள் ராணுவ பிரிவு அசோக்குமார், விவசாய அணி தலைவர் கதிரவன் பங்கேற்றனர்.தேனுார் கட்டப்புலி நகரில் கிளைத் தலைவர் ஜெயபால் தலைமை வகித்து கொடியேற்றினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் தவமணி, மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி முன்னிலை வகித்தனர். கிளை நிர்வாகிகள் அருணாச்சலம், கார்த்திக், ரமேஷ், தனபாண்டி பங்கேற்றனர். அவரது படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.எழுமலையில் பா.ஜ., முன்னாள் மாவட்டத் தலைவர் பொன்கருணாநிதி தலைமையில் நடந்தது. மதுரை மேற்கு மாவட்டச் செயலாளர் உதயசந்திரன், மண்டல் தலைவர் நாகராஜன், நிர்வாகிகள் சாந்தகுமார், அருள்ஆனந்த் ஆகியோர் வாஜ்பாய் படத்திற்கு மாலை அணிவித்தனர். உசிலம்பட்டியில் பா.ஜ., நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். அரசு மருத்துவமனையில் மூத்த தலைவர் போஸ் தலைமையில் நோயாளிகளுக்கு பழங்கள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ