உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை மீனாட்சி கோயில் எதிரே ஆடு வெட்டிய வீடியோ: போலீசார் விசாரணை

மதுரை மீனாட்சி கோயில் எதிரே ஆடு வெட்டிய வீடியோ: போலீசார் விசாரணை

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மேற்கு கோபுரம் எதிரே 100 மீட்டர் தொலைவில் உள்ள கட்டடத்தில் ஆடு பலியிட்டு கறி வெட்டும் வீடியோ பரவியது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட எதிர்ப்புள்ள நிலையில், மீனாட்சி அம்மன் கோயில் எதிரேயுள்ள மேலகோபுர வீதியில் உள்ள ஒரு கட்டடத்தின் மாடியில் இரு ஆடுகளை பலியிட்டு கறி வெட்டுவதை ஒருவர் வீடியோ எடுத்து பதிவிட்டார். இது வைரலானதால் கோயில் புனிதத்தை காக்கும் வகையில் கோபுரம் எதிரே இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன் புகார் அளித்தார்.போலீஸ் விசாரணையில், மேலக்கோபுரவீதியில் உள்ள ஒரு சந்தில், சமயகருப்பன் சங்கிலி கருப்பன் சுவாமியை வைத்து அருள்வாக்கு சொல்லும் நபருக்கு, வேண்டுதல் நிறைவேறியதற்காக பக்தர் ஒருவர் இரு ஆடுகளை தந்தது தெரிந்தது. அதை பலியிட்டு அன்னதானம் வழங்குவதற்காக கறி வெட்டியதாக அந்நபர் தெரிவித்தார். அவரிடம் கோயில் பகுதியில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என போலீசார் எச்சரிக்க, தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை