உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தொலைநோக்கு பார்வை பயிற்சி

தொலைநோக்கு பார்வை பயிற்சி

வாடிப்பட்டி: தேசிய தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 300 வட்டார அளவிலான கூட்டமைப்புகளை முன்மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்புகளாக உருவாக்க, வாடிப்பட்டி வட்டார அளவிலான கூட்டமைப்பு நடப்பு நிதியாண்டில் தேர்வு செய்யப்பட்டது. அதன்படி 36 நாட்கள் பயிற்சியும் தொலைநோக்கு பார்வை, ஆண்டு செயல்திட்டம், வணிகத் திட்டம், 70 நாட்கள் கள அளவிலும் செய்முறை பயிற்சி நடந்தது. பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாநில வள பயிறறுநர் தமிழரசி தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர்கள் வீரமணி, காளிதாஸ் முன்னிலை வகித்தனர். வட்டார இயக்க மேலாளர் சந்திரசேகரன் வரவேற்றார். ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் வசந்தா, பவிதா, செந்தாமரை, தனபாக்கியம், லதா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை