உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நீர்வளத்துறை அமைச்சு பணியாளர்கள் அதிருப்தி

நீர்வளத்துறை அமைச்சு பணியாளர்கள் அதிருப்தி

மதுரை : 'நீர்வளத்துறையில் உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்காததால் பாதிக்கப்படுவதாக' பொதுப்பணித்துறை அமைச்சுப் பணியாளரிடையே அதிருப்தி எழுந்துள்ளது.அரசு நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை கண்காணிப்பாளர்களுக்கு ஆட்சி அலுவலர் பதவி உயர்வுக்காக 25 பேரை தேர்ந்தெடுத்த பெயர் பட்டியலை மே 22ல் வெளியிடப்பட்டது. கடந்த காலங்களில் பதவி உயர்வு பட்டியலை வெளியிட்ட மறுநாளே அதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டுவிடும். தற்போது 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை பதவி உயர்வு ஆணை வழங்கப்படவில்லை. பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப் பணியாளர் சங்க மாநில தலைவர் செல்வம் கூறியிருப்பதாவது:சமீபத்தில் வெளியிட்ட பதவி உயர்வு பட்டியலில் உள்ள 25 பேரில் ஒருவர் ஜூனில் பணிஓய்வு பெற உள்ளார். குறிப்பாக 35 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து கடைசி காலத்தில் வந்துள்ள இந்தப் பதவி உயர்வு, உரிய நாளில் வழங்காமல் காலதாமதம் ஆகிக்கொண்டிருக்கிறது. உடனே பதவி உயர்வு வழங்க வேண்டும் என, நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளருக்கு கடிதம் அனுப்பியும், இன்னும் வழங்காமல் இருப்பது, பணியாளர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இனியும் காலதாமதத்தை தவிர்த்து இம்மாதம் பணிஓய்வு பெறுகிற கண்காணிப்பாளருக்கு பதவி உயர்வு வழங்கி காலியாக உள்ள 18 ஆட்சி அலுவலர் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை