உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நீர்வளத்துறை அலட்சியம்: கண்மாயில் உடைப்பு

நீர்வளத்துறை அலட்சியம்: கண்மாயில் உடைப்பு

மேலுார் : இ. மலம்பட்டியில் 30 ஏக்கர் பரப்பளவில் நீர்வளதுறைக்கு சொந்தமான கல் அறுந்தான் கண்மாய் உள்ளது. இக்கண்மாய்க்கு அட்டப்பட்டி தன்னுாற்று கண்மாய் வழியாக வரும் தண்ணீரால் கண்மாய் நிரம்பி அதன் மூலம் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பயன்பெறும்.இக்கண்மாய்கரை வலுவிழந்து காணப்பட்டதால் விவசாயிகள் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று பெய்த மழைக்கு கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி பயிர்கள் பாதிப்பு அடைந்ததோடு அரசு உயர்நிலை பள்ளிக்குள் தண்ணீர் புகுந்தது. இதற்கு பிறகாவது நீர்வளத்துறையினர் உடனடியாக உடைப்பை சரி செய்ய வேண்டும்.

போக்குவரத்து பாதிப்பு

தும்பைப் பட்டியில் இருந்து பெரியாற்று கால்வாய் நீர் மற்றும் மழை நீர் இ. மலம்பட்டி சிறுவன கண்மாய்க்கு செல்லும் வழியில் கீழவளவில் ரோட்டின் குறுக்கே செல்கிறது. ரோட்டின் கீழ் பகுதியில் தண்ணீர் செல்வதற்காக பதிக்கப்பட்ட சிமெண்ட் குழாய்களை நீர்வளத் துறையினர் பராமரிக்காததால் மண் மூடி விட்டது. அதனால் நேற்று பெய்த மழைக்கு ரோட்டின் மேல் பகுதியில் மழை நீர் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தும்பை பட்டியில் இருந்து இ.மலம்பட்டிக்கு 7 கி.மீ., தொலைவில் செல்ல வேண்டியதற்கு பதிலாக மக்கள் 15 கி.மீ., துாரம் சுற்றி செல்ல வேண்டியதிருப்பதால் ஆபத்தான முறையில் தண்ணீரை கடந்து சென்றனர். வேகமாக செல்லும் தண்ணீரை மக்கள் கடந்து செல்லும்போது தண்ணீரில் அடித்துச் செல்வதற்குள் நீர்வளத் துறையினர் சிமென்ட் குழாய்களை துார்வாரி தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை