ஆடித்தபசு கொடியேற்றம்
மேலுார்: தும்பைபட்டி கோமதி அம்பிகை சங்கரலிங்கம் சுவாமி,சங்கரநாராயணர் சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆக.,7ல் ஆடித்தபசு அன்று பக்தர்கள் கோயில் தீர்த்தம், பால், சந்தனம், பன்னீர் குடத்தை கோயிலுக்கு கொண்டு வந்து அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றியும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர். பிறகு சங்கரலிங்கம் சுவாமி ஆடித்தபசு காட்சியாக சங்கரநாராயண மூர்த்தியாக காட்சி தரும் நிகழ்ச்சி நடப்பதுடன் திருவிழா நிறைவுபெறும். ஏற்பாடுகளை சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.