உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட உதவி

சோழவந்தான்: சோழவந்தானில் அக் சயா டிரஸ்ட் சார்பில் இலவச மருத்துவ முகாம், பள்ளி மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. சித்தா, ஹோமியோபதி, அக்குபஞ்சர், அக்குபிரஷர், வர்மம், நேச்சுரோபதி மூலம் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. பொது தேர்வில் 12ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ., வெங்கடேசன் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். துணைத் தலைவர் கலாவதி, செயலாளர் ராமன், ஆலோசகர் ஸ்ரீதர் தலைமை வகித்தனர். சேர்மன் ஜெயராமன், துணைத் தலைவர் காளீஸ்வரன், ஆலோசகர் ராஜேஷ் முன்னிலை வகித்தனர். தலைவர் அசோக் வரவேற்றார். துணைத் தலைவர் பிச்சைமுத்து தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ