உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நலத்திட்ட உதவிகள்

நலத்திட்ட உதவிகள்

மேலுார்: மதுரை வடக்கு மாவட்டம் மேலுார் தொகுதியில் தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமை வகித்து 7,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொகுதி மேற்பார்வையாளர் ஆனந்த், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தியாகராஜன், நகராட்சித் தலைவர் முகமது யாசின் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நகர் தலைவர் சின்னன் வரவேற்றார். தேனி எம்.பி., தங்கத் தமிழ்ச்செல்வன், நகர் செயலாளர் தங்கப்பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர். துாய்மைப் பணியாளர்களுக்கு காஸ் அடுப்பு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பொருளாளர் ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை