உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காட்சிப்பொருளான டேங்க் திறப்பு விழா என்னாச்சு

காட்சிப்பொருளான டேங்க் திறப்பு விழா என்னாச்சு

மேலுார்: அழகாபுரியில் மேல்நிலை தொட்டி கட்டி எட்டு மாதங்களைத் தாண்டியும் பயன்பாட்டுக்கு வராததால் மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் அவதிப்படுகின்றனர்.இப் பகுதியில் மந்தை அருகில் 700க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்காக 40 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை தொட்டி ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்டது. அத்துடன் தெருக் குழாய் இணைப்பும் கொடுக்கப்பட்டு தொட்டியில் தண்ணீர் ஏற்றி கசிவதை உறுதி செய்யும் பரிசோதனையும் முடிவடைந்தது. அதன்பின் குடிநீர் தொட்டி இன்று வரை பயன்பாட்டுக்கு வரவில்லை.அப்பகுதி மக்கள் கூறியதாவது : தொட்டி கட்டி முடித்து எட்டு மாதங்களாகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் குடிநீருக்காக தினமும் பல கி.மீ., அலைந்து திரிவதால் குறித்த நேரத்திற்கு பள்ளி, வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாவதுடன், குடிநீர் தொட்டியும் காட்சிப் பொருளாகி விட்டது. தொட்டியை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகள் கூறுகையில், தண்ணீரை தொட்டியில் ஏற்றி பரிசோதனை செய்து வருகிறோம். தொட்டியை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை