உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநில கணக்காயருக்கு ரூ.11.74 கோடியை எப்பங்க கொடுப்பீங்க: மாநகராட்சி ஆசிரியர்கள் மீண்டும் கேள்வி

மாநில கணக்காயருக்கு ரூ.11.74 கோடியை எப்பங்க கொடுப்பீங்க: மாநகராட்சி ஆசிரியர்கள் மீண்டும் கேள்வி

மதுரை: மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை வருங்கால வைப்பு நிதி வட்டியுடன் சேர்ந்து ரூ.11.74 கோடியை மாநகராட்சி எப்போது வழங்கும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் 438 ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, அதற்கான வட்டி 1.4.1990 முதல் 31.3.2019 வரை மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு மாநகராட்சி முறையாக வழங்கவில்லை. அவை முழுவதும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கான பணம்.இத்தொகை கடந்த 29 ஆண்டுகளாக ரூ.20.05 கோடி வழங்க வேண்டியிருந்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் நடத்திய போராட்டம் காரணமாக 29 ஆண்டுகளுக்கு பின் 15.69 கோடியை மட்டுமே மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு மாநகராட்சி செலுத்தியது.நிலுவை பி.எப்., ரூ. 4.35 கோடி, அதற்கான வட்டி ரூ. 6.39 கோடி என மொத்தம் ரூ.11.74 கோடியை இன்னும் வழங்காமல் மாநகராட்சி இழுத்தடித்து வருகிறது. இதை விரைந்து வழங்க ஆசிரியர் சங்கங்கள் சார்பில் தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டாலும் நடவடிக்கை இல்லை என சர்ச்சை எழுந்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறுகையில், ஆசிரியர்கள், அலுவலர்கள் நலன் கருதி நிலுவை பி.எப்., வட்டித் தொகையை விரைவில் வழங்க தொடர்ந்து வலியுறுத்துகிறோம். ஆனால் நடவடிக்கை இல்லை. ஏற்கனவே போராட்டங்கள் நடத்தித்தான் தொகையை வழங்கச் செய்தோம். அதுபோல் நிலுவை தொகையையும் விரைவில் வழங்க போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை