உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கச்சிராயிருப்பு ரோடு சீரமைக்கப்படுமா

கச்சிராயிருப்பு ரோடு சீரமைக்கப்படுமா

சோழவந்தான்: சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு மந்தையில் இருந்து மயானம் செல்லும் ரோட்டை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். அப்பகுதியைச் சேர்ந்த பிரதாப்: இங்குள்ள மந்தையில் இருந்து மயானத்திற்கு செல்லும் ரோடு ஜல்லிக் கற்கள் பெயர்ந்து மோசமாக உள்ளது. பல இடங்களில் மண் ரோடாக காட்சியளிக்கிறது. வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுகின்றனர். மந்தையில் இருந்து ஒரு கி.மீ., மேலான தொலைவில் மயானம் அமைந்துள்ளது. இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும் போது மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மேலும் விவசாய பணிகளுக்காக ஏராளமானோர் இவ்வழியில் செல்கின்றனர். இரவில் மேடு பள்ளம் தெரியாமல் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ரோட்டை சீரமைக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை